21 வயதில் பஞ்சாயத்து தலைவியானார் சந்தியா..! கல்லூரியில் படித்துக் கொண்டே தேர்தலில் வென்று அசத்தல்! எப்படி தெரியுமா?

தமிழகம் முழுவதும் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில் கல்லூரி மாணவி ஒருவரும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் கே.என்.தொட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கல்லூரி மாணவி ஜெய்சந்தியா ராணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். கே.தொட்டி கிராமத்தை சேர்ந்த ஜெய்சந்திரா ராணி மொத்தம் பெற்ற வாக்குகள் 1,1270 அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் 950 வாக்குகள் மட்டுமே பெற்றதால் 210 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் ஜெய்சிந்தியா.

ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்வான ஜெய்சந்தியா ராணி, கர்நாடகாவில் மாலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தந்தை ஜெயசாரதி, ஏற்கெனவே கே.என்.தொட்டி கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவராகப் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் கடந்த டிச.27 மற்றும் டிச.30 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 315 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இளம் வயதில் ஒரு பெண் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வான நிலையில், மதுரையில் 79 வயது பாட்டி ஒருவரும், 82 வயது பாட்டி ஒருவரும் பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்றுள்ளனர்.