பாகிஸ்தான் நாட்டின் வாட்ஸ்அப் குரூப்பில் துப்பாக்கி தொடர்பான தகவல்களை பதிவு செய்ததற்காக இளைஞரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
பாகிஸ்தான் வாட்ஸ்அப் குரூப்பில் கோவை இளைஞர்!!! அதிர்ந்த காவல்துறை!!! நாச வேலை திட்டம் அரங்கேற்றம்!!!

கோவை மாவட்டத்தில் பிரபல தங்கநகை பட்டறை செயல்பட்டு வருகிறது. இங்கு பரூக் கௌசர் என்பவர் பணியாற்றி வந்தார். இவருடைய செல்போன் சமீபத்தில் பழுதடைந்தது. அதனை சரிசெய்வதற்காக சர்வீஸ் கடையில் கொடுத்துள்ளார்.
மொபைல் போனை பரிசோதித்த கடை உரிமையாளர், பரூக் "பாகிஸ்தான் முஜாகிதீன்" என்ற வாட்ஸ்அப் குரூப்பில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த குரூப்பில் துப்பாக்கி தொடர்பான தகவல்களையும், புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். மேலும் கூகுளில் துப்பாக்கி தொடர்பான பக்கங்களை இவர் தேடியுள்ளதை கண்டுபிடித்தார்.
தகவல்களை சேகரித்த காவல்துறையினர் பரூக் கௌசரை கைது செய்து விசாரணை நடத்தினர். அவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். ஆனால் அவரிடம் ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கார்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
ஒரு வங்காளதேச குடிமகனிடம் எப்படி இந்திய நாட்டின் குடியுரிமைக்குரிய அட்டைகள் கிடைத்தன என்பது குறித்து காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஏற்கனவே கோயம்புத்தூர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி வந்ததால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த செய்தியினால் பாதுகாப்பு இன்னும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவமானது கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.