ஒரே ஒரு வீட்டுக்குள் 123 பாம்புக் குட்டிகள்..! இரவானால் ஒன்றன் பின் ஒன்றாக வெளியே வரும் அமானுஷ்யம்..! பீதியில் உறைந்த கிராமம்..! எங்கு தெரியுமா?

மத்திய பிரதேசத்தில் கிராமவாசி ஒருவரின் வீட்டில் தினம்தோறும் பல நாகப்பாம்புகள் உலா வருவதால் பல நாட்களாக தங்களுடைய தூக்கத்தை இழந்து தவித்து வருவதாக அவர் சோகத்தை பகிர்ந்திருக்கிறார்.


மத்திய பிரதேசத்தில் அமைந்திருக்கும் கிராமம் ஒன்றில் வசித்து வருபவர் ஜீவன் சிங் குஷ்வா. இவருக்கு அந்த ஊரில் சொந்தமாக வீடு ஒன்று இருக்கிறது. தினம்தோறும் தன் வீட்டின் பின்புறத்தில் காவல் காப்பதை தன் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இப்படியாக இவர் காவல் காப்பது திருடர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக அல்ல. தினந்தோறும் அங்கு வந்து செல்லும் நாகபாம்புகள் இடம் இருந்து தன்னுடைய குடும்பத்தினரை காப்பாற்றுவதற்காக என்று அவர் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.

ஆம், தினம்தோறும் அவர் நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு கால்களை கீழே தொங்க விடாமல் மிகவும் இன்னல் உடன் தன் குடும்பத்தினரை காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வுடன் தூங்காமல் கண் விழித்து கொண்டு அந்த இளம் நாகபாம்பு களிடமிருந்து தன் குடும்பத்தினரை காப்பாற்றி வருகிறாராம். இதைப்பற்றி அவரிடம் கேட்டபொழுது, என் வீட்டிற்கு வெளியே கொரோனா வைரஸ் உடனும் வீட்டிற்கு உள்ளே நாகப்பாம்பு களுடனும் நான் போராடிக்கொண்டு என் நாட்களை கழித்து வருகிறேன்.. நான் எங்கே செல்வது என்று தெரியவில்லை.. என்று சோகமாக மனமுருகி கூறியிருக்கிறார். 

பொழுது சாய்ந்து இருள் சூழ்ந்த உடன், இளம் நாகப்பாம்புகள் எங்கிருந்தோம் வேகவேகமாக தன்னுடைய வீட்டிற்கு படை எடுப்பதாக குஷ்வா அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார். அந்த இளம் நாகப்பாம்புகள் தங்கியிருக்கும் புற்றை கண்டுபிடிப்பதற்காக வனத்துறையினர் பலமுறை போராடி உள்ளனர். இருப்பினும் இது நாள் வரை அவை எங்கிருந்து வருகின்றன என்பதை அவர்களால் கண்டுபிடிக்க இயலவில்லை என்று கூறியிருக்கிறார். பொதுவாக ஒரு நாகம் ஒரே நேரத்தில் 20 முதல் 40 முட்டைகள் வரை இடும் சக்தியை கொண்டது. 

ஒருவேளை என்னுடைய வீட்டின் கீழ்ப்பகுதியில் அந்தப் பாம்புகளின் இருப்பிடம் இருக்கக்கூடும் என்று வனத்துறையினர் சந்தேகிப்பதாக குஷ்வா கூறியிருக்கிறார். மேலும் பேசிய அவர் பொதுவாகவே குழந்தை நாகங்களின் விஷம் மிகுந்த நச்சுத் தன்மை உடையது என்று கூறியிருக்கிறார். இளம் வயதினரை போலவே அதுவும் மிகுந்த ஆபத்தை விளைவிக்க கூடியது. அதற்காகத்தான் தினம்தோறும் என் தூக்கத்தை தியாகம் செய்து என் குடும்பத்தினருக்காக நான் இந்த நாகப்பாம்புகள் உடன் போராடிக் கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

இந்த நாக பாம்புகளின் அட்டகாசம் தாங்க முடியாமல் பலரும் இந்த கிராமத்தை விட்டு வேறு இடங்களுக்கு ஓடி சென்று விட்டனர் என்றும் அவர் வருத்தத்துடன் கூறி இருக்கிறார். இதுபற்றி வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, தினந்தோறும் அவர் வீட்டின் கீழ் பகுதியில் இருந்து நிறைய நாகப்பாம்புகள் தரை மீது வலம் வருகின்றன. நாங்கள் ஒரு நாள் 51 நாகப்பாம்புகளை அவரது வீட்டில் இருந்து மீட்டெடுத்தோம். அதுமட்டுமில்லாமல் தினந்தோறும் நான்கு முதல் ஐந்து நாகப்பாம்புகள் அவரது வீட்டில் உலா வருகின்றன. நாங்களும் பலமுறை அது எங்கிருந்து வருகிறது என்பதை கண்டறிந்து முழுமையாக அவரை அதிலிருந்து பாதுகாக்க பல முயற்சிகளை கையாண்டு விட்டோம். இருப்பினும் எதுவும் பலன் அளிக்கவில்லை என்று கூறினர். இந்த நாக பாம்புகளின் அட்டகாசத்தால் அந்த கிராமவாசிகள் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.