எடப்பாடியார் ராஜதந்திரத்தால் கதிகலங்கி நிற்கும் கூட்டணிக் கட்சிகள்…! செம குஷியில் ரத்தத்தின் ரத்தங்கள்.

எதிர்க்கட்சியான தி.மு.க., அதனுடைய கூட்டணிக் கட்சிகளுடன் தெளிவாக வெற்றிநடை போட்டுவரும் நேரத்தில், அ.தி.மு.க.வுக்குக் கூட்டணிக் கட்சிகள் தினமும் ஒரு குடைச்சல் கொடுத்து வருகின்றன. இவற்றுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவே, அ.தி.மு.க. முதல் பிரசாரக் கூட்டத்தில் கே.பி.முனுசாமி மூலம் அதிரடி அறிவிப்பு விடப்பட்டதாக சொல்லப்படுகிறது.


பெரும் திரளாகக் கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி, ’’கூட்டணியில் எந்த தேசிய கட்சிகளும், மாநில கட்சிகள் வந்தாலும் அ.தி.மு.க. தலைமையில்தான் ஆட்சி. இதில் கூட்டணி ஆட்சி என்பதற்கே பொருள் இல்லை. தேவையும் இல்லை. எனவே கூட்டணி ஆட்சி அமைப்போம், கூட்டணி அமைச்சரவை அமைப்போம் என்று எண்ணத்தோடு எந்த அரசியல் கட்சிகளும் நம்முடன் கூட்டணி வரும்போது இதை சிந்தித்துக்கொள்ளவேண்டும்’ என்றார்.

. முதல்வர் எடப்பாடியுடன் விவாதிக்காமல் அவர் இப்படி பேசியிருக்க முடியாது. யாருக்கும் அடிபணியும் ஆள் நான் இல்லை என்பதை முனுசாமி மூலம் முதல்வர் எடப்பாடி அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டார் என்பதுதான் அரசியல் ஆய்வாளர்களின் கருத்து.

அதேபோல் கூட்டத்தில் பேசிய எடப்பாடி, ’’எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களுக்கு வாரிசு கிடையாது. நாம் தாம் வாரிசுகள்.அதிமுகவில் தான் ஒரு சாதாரண தொண்டன் கூட முதலமைச்சராக முடியும். இன்றைக்கு நான், நாளைக்கு அண்ணன் ஓபிஎஸ். அதற்கடுத்தபடியாக நீங்கள் கூட முதல்வராக முடியும்’’ என சொன்னபோது தொண்டர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர்.

கூட்டணிக்கு எச்சரிக்கையும், தொண்டர்களுக்கு மகிழ்ச்சியும் கொடுத்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி என்பதுதான் அ.தி.மு.க. கூட்டம் சொல்லும் செய்தி. அப்புறமென்ன எடப்படியாருக்கு நல்ல நேரம்தான்.