பெண்கள் எண்ணப்படி நடக்கும் எடப்பாடி பழனிசாமி…! மேலும் 500 மதுக்கடைகளுக்கு மூடுவிழா

தமிழகத்துக்கு பெரும் வருவாய் தருவதே டாஸ்மாக் என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனாலும், மக்களின் நலனை முன்னிட்டு தமிழகத்தில் மதுவிலக்கு படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.


ஜெயலலிதா கூறியதை நிறைவேற்றும் வகையில் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்ததும் 500 மதுக்கடைகளை மூடினார். தற்போது தமிழகத்தில் 5370 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. 3 ஆயிரத்துக்கும் குறைவான மது பார்கள் செயல்பட்டன. கொரோனா தொற்று பரவல் காரணமாக பார்கள் இன்னும் திறக்கப்படவில்லை.

இந்த நிலையில் பார்களைத் திறாக்க வேண்டும் என்று பார் உரிமையாளர்கள் போராடி வந்தாலும், எடப்பாடி பழனிசாமி அமைதி காத்துவருகிறார். இந்த நிலையில்தான், டாஸ்மாக் கடைகளில் மேலும் 500-ஐ குறைக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது. 

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மதுக்கடைகளைக் குறைப்பதன் மூலம் பெண்களின் ஆதரவைப் பெறமுடியும் என்று நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆகவே, குடும்பத்துக்கு கடும் துன்பம் விளைவிக்கும் டாஸ்மாக் எண்ணிக்கையை குறைக்கும் பணி அதிவேகமாகத் தொடங்கியுள்ளது.