பொது இடத்தில் தும்மியவரை கும்மி எடுத்த மக்கள்..! காரணம் கொரோனா..! எங்கு தெரியுமா?

மகாராஷ்டிரா மாநிலத்தில் பொதுயிடத்தில் தும்மிய நபரை அங்கிருந்தவர்கள் பொதுமக்கள் ஒன்று கூடி தாக்கிய சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.


உலக முழுவதும் இன்று வரை தினம்தினம் நாம் அனைவரும் உச்சரிக்கும் பெயர் ”கொரோனா” அந்த அளவிற்கு இதன் பாதிப்பு உலகம் முழுவதும் உள்ளது. இந்நிலையில், கொரோனாவிற்கு இந்தியாவில் 3 பேர் பலியாகியுள்ளனர், மேலும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 171 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய மாநில அரசுகள் இணைந்து கொரோனா பரவுவதை தவிர்க்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற சூழ்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் பொதுயிடத்தில் ஒருவர் வாயை மூடாமல் தும்மியுள்ளர்.

இதனையடுத்து அந்த நபரை அங்கிருந்த பொதுமக்கள் ஒன்று கூடி தாக்கியதுள்ளனர் இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுகாதார அமைச்சகம், பொதுமக்களுக்கு கொரோனா பரவாமல் தவிர்க்க ஒருவருக்கு ஒருவர் இடைவெளி விட வேண்டும் என பல ஆலோசனை வழங்கியுள்ள நிலையில் இந்த சம்வபம் மிகுந்த வருத்ததை அளித்துள்ளது.

மேலும், இதை குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த சமூக ஆர்வலர்கள் . இந்த நேரத்தில் நாம் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்க வேண்டும் இது போன்ற செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது என கூறியுள்ளனர்.