மக்களவையை அடுத்து மாநிலங்கள் அவையிலும் தாக்கல் ஆகிறது குடியுரிமை சட்ட திருத்த மசோதா …!

மிகப்பெரிய போராட்டத்திற்கு பின்பு நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா வெற்றிகரமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது.


இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேறிய நிலையில் தற்போது அதனை மாநிலங்களவையிலும் இன்று பிற்பகல் தாக்கல் செய்ய உள்ளனர்.

இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் மிகப் பெரிய போராட்டங்கள் நிலவி வந்தன. இதனை எதிர்த்து காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ், ஆகியோரும் வாதிட்டனர். 

இருப்பினும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இந்த சட்டத் திருத்த மசோதாவை ஏற்றுக்கொண்டதால் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம நள்ளிரவு இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாக குடியுரிமை சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதால் தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக பாரத பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்தப் பதிவில் மிகுந்த ஆரோக்கியமான விவாதத்திற்கு பின்னர் வெற்றிகரமாக குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேறியது அடுத்து தான் மிகவும் உற்சாகமாக இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இதனையடுத்து மாநிலங்களவையில் இன்று குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மதியம் 2 மணி அளவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதுமட்டுமில்லாமல் இதைப்பற்றி மாநிலங்களவை உறுப்பினர்கள் விவாதம் செய்ய சுமார் ஆறு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களவை போலவே மாநிலங்களவையிலும் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்படுமா என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இருப்பினும் பல கட்சித் தலைவர்களும் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களுடைய கருத்துக்களை கூறிவருகின்றனர். குறிப்பாக மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் கமலஹாசன் இந்த சட்ட திருத்த மசோதாவில் முஸ்லிம்களையும் இலங்கை தமிழர்களையும் சேர்க்காதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.