அமலுக்கு வந்தது குடியுரிமை சட்டத் திருத்தம்! அரசிதழில் மத்திய அரசு அறிவிப்பு!

கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதா தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பின் இந்திய நாட்டில் சட்டம் ஆக்கப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் இந்திய மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்த மசோதாவில் ஆப்கானிஸ்தான் , வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து அகதிகளாக வரும் மக்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது . ஆனால் இந்த மசோதாவில் இலங்கைத் தமிழர்களையும் முஸ்லிம்களையும் சேர்க்காதது ஏன்? என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் . இதன் மூலம் முஸ்லிம்களுக்கு பாரபட்சம் காட்டுகிறார்களா மத்திய அரசு? என்றும் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் வட மாநிலங்களைப் போலவருகின்றனர்வே தமிழ்நாட்டிலும் பல இடங்களில் இந்த திருத்த மசோதாவை எதிர்த்து பல போராட்டங்கள் நடைபெற்று வந்த வண்ணம் உள்ளது . பல கல்லூரி மாணவர்களும் இந்த போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .இந்நிலையில் இந்த சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட பின் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது அவரது ஒப்புதல் பெற்று வந்துள்ளது. 

ஆகையால் இந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதா நம் இந்திய நாட்டில் சட்டம் ஆக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நாடு முழுவதும் அமலானது என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பாணையை வெளியிட்டிருக்கிறது.