அழிந்து கொண்டிருக்கும் சர்க்கஸ் கலையை ஜெர்மானியர்கள் புதிதாக வடிவமைத்துள்ள சம்பவமானது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கண் முன் பிரமாண்டமாக விரிந்து ஆப்ரிக்க யானை! பரவசம் அடையும் பார்வையாளர்கள்! என்ன தெரியுமா?
மக்களை மகிழ்விப்பதற்கு நகைச்சுவைக்கு இணையாகயிருப்பது சர்க்கஸ் கலை. கிட்டத்தட்ட 250 வருடங்களாக இந்த கலை உலகிலுள்ளது. ஆனால் காலம் செல்ல செல்ல தொழில்நுட்பத்தின் ஆக்கிரமிப்பால் சர்க்கஸ் பணியில் தொய்வு ஏற்பட தொடங்கியது.
ஆங்காங்கே நடந்து கொண்டிருந்த சர்க்கஸ் நிகழ்ச்சிகள் தற்போது மாதத்திற்கு ஒரு முறை அல்லது வருடத்திற்கு ஒரு முறையே நடைபெறுகின்றது. அழிவின் விளிம்பில் உள்ள சர்க்கஸ் கலையை ஜெர்மனி நாட்டினர் தொழில்நுட்பத்தை வைத்தே முன்னேற்றியுள்ளனர்.
முதல் முறையாக ஜெர்மனி நாட்டில் ஹாலோகிராம் மூலம் சர்க்கஸ் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சியானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மகிழ்ச்சியில் துள்ளாட செய்துள்ளது.
இந்த தொழில்நுட்பத்தின் மூலம் பல்வேறு விலங்குகள் மற்றும் உயிரினங்கள் உண்மையாக தோற்றமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் தொழில் முறையை உபயோகித்து 10,000-க்கும் மேலான ஒளிமிகு விளக்குகளின் மூலம் வண்ணமயமாக காட்சியளிக்க உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தை முதல் முறையாக ஜெர்மனி நாட்டின் லியூபர்க் நகரிலுள்ள ரோஸ்கல்லி சர்க்கஸ் உபயோகித்துள்ளது. இந்த சர்க்கஸில் கிட்டத்தட்ட 1,500 பேர் ஒன்றாக வசிக்கும் மாடம் உள்ளது. 2 மணிநேரம் தொடர்ந்து சர்க்கஸ் நிகழ்ச்சிகளை காண்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த சர்க்கஸ் நிகழ்ச்சியானது அந்நாட்டில் பெரிய அளவில் புகழ் பெற்றுள்ளது என்று கூறினால் அது மிகையாகாது.