ஸ்ரீதேவி உண்மையில் உயிரிழந்தது எப்படி? 2 ஆண்டுகளாக நீடித்த மர்மம் உடைந்து வெளியான தகவல்!

நடிகை ஸ்ரீதேவி இறந்ததற்கான காரணம் குறித்து அவருடைய சுயசரிதையில் வெளியான தகவல்கள் அனைவரையும் வருத்தமடைய செய்துள்ளன.


இந்திய திரையுலகில் முண்ணணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. 2018-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதியன்று இவர் தன்னுடைய குடும்பத்தினருடன் துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மாரடைப்பால் இறந்ததாக முதலில் கூறப்பட்டது.

அதன்பின்னர் அவர் தன்னுடைய குளியல் அறையில் மயங்கி விழுந்து இருந்ததாக தகவல்கள் வெளியாயின. அவருடைய மரணம் விபத்து என்று துபாய் நாட்டின் காவல்துறையினர் வழக்கை முடித்து வைத்தனர்.இந்நிலையில் ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில், சத்யார்த் நாயக் என்பவர், ஸ்ரீதேவிக்கு குறைந்த ரத்த அழுத்த நோய் இருந்ததாகவும், ஏற்கனவே ‌3 முறை மயங்கி விழுந்திருந்ததாகவும் எழுதியுள்ளார்.

இந்நிலையில், சம்பவத்தன்று குறைந்த ரத்த அழுத்தத்தினால் தான் அவர் மயங்கி குளியலறையில் விழுந்து உயிரிழந்தார் என்று அவர் எழுதியுள்ளார். இது ஸ்ரீதேவியின் ரசிகர்கள் அனைவருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது‌ மேலும் அவர் மயங்கி விழுவதற்கு முன்னதாக அதிக அளவில் மது அருந்தியிருந்தாக தகவல் வெளியாகியிருந்தது.

ஆனால் ஸ்ரீதேவி போதையில் உயிரிழந்தாரா என்பது குறித்த தகவல் அந்த புத்தகத்தில் வெளியிடப்படவில்லை. அதே சமயம் பிரேதப்பரிசோதனை அறிக்கையில் ஸ்ரீதேவி போதையில் இருந்தார் என்றே துபாய் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.