சென்னையில் பரபரப்பு!! மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய சினிமா இயக்குனர்!

வேறு ஒருவருடன் நெருங்கி பழகியதால் மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய சினிமா இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளார்


சென்னை பள்ளிக்கரணையில் உள்ள குப்பைக் கிடங்கில் கடந்த 20ஆம் தேதி ஒரு பெண்ணின் வலது கை மற்றும் 2 கால்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனை தொடர்ந்து அந்த பெண்மணி யார் என்று போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

பெண்ணின் கையில் டாட்டூ இருந்த காரணத்தினால் அதனை அடையாளமாக வைத்து அந்த பெண் குறித்து தகவல்கள் தெரிந்தால் தெரிவிக்குமாறு போலீசார் பிட் நோட்டீஸ்கள் விநியோகம் செய்தனர்.

அனைத்து மாவட்ட போலீசாருக்கும் அந்த பெண்ணின் டாட்டூவுடன் கூடிய கை புகைப்படத்தை அனுப்பி போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் போலீசார் துப்பு துலக்கியுள்ளனர்.

குப்பை மேட்டில் சிக்கிய பெண்ணின் உடல் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சந்தியா என்று தெரியவந்துள்ளது- அவர் சினிமா இயக்குனர் பாலகிருஷ்ணா என்பதும் கண்டுபிடிக்கப்ப்டடது- கணவர் பாலகிருஷ்ணாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சந்தியா பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து காதல் இலவசம் எனும் படத்தை இயக்கியுள்ள பாலகிருஷ்ணாவை   அழைத்து போலீசார் விசாரித்த போது அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருபபதை அறிந்து கொலை செத்தாக பாலகிருஷ்ணா கூறியுள்ளார்.

கொலை செய்து மரம் அறுக்கும் எந்திரம் மூலம் உடல் பாகங்களை வெட்டி தூக்கி வீசியதாகவும் கூறி அதிர வைத்துள்ளார் பாலகிருஷ்ணா. இதனை அடுத்து பாலகிருஷ்ணாவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சந்தியாவின் தலையை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்