மேற்கு சுவிட்சர்லாந்தை சேர்ந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் தன்னுடைய சிறுவயதில் பாதிரியார் ஒருவரால் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதர் உதட்டுல முத்தம் கொடுத்தார்..! படுக்கை அறைக்கு கூட்டிட்டு போனார்..! 46 வயது பாதிரியாரால் 19 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்!

மேற்கு சுவிட்சர்லாந்தில் பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றி வரும் ஒருவரை அவரது சிறுவயதில் பாதிரியார் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பால் ப்ரோஜெக்ஸ் என்பவர் பாதிரியாராகவும் சட்ட நிபுணராகவும் பதவி வகித்து வருகிறார். பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றி வரும் ஒருவரை அவருடைய 17 வயதில் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்தப் பல்கலைக்கழக விரிவுரையாளர் தனக்கு நேர்ந்த கொடுமைகளை பற்றி விரிவாக கூறியிருக்கிறார். தனக்கு 17 வயது இருக்கும் பொழுது 1998 ஆம் ஆண்டு வலைஸில் அமைந்திருக்கும் இல்லத்தில்தான் இருந்து வந்துள்ளார். 46 வயதான பாதிரியார் அந்த நேரத்தில் சிறுவனாக இருந்த விரிவுரையாளரை அழைத்து உதட்டில் முத்தம் அளித்ததாகவும் கூறியிருக்கிறார்.
பின்னர் தன்னை படுக்கைக்கு அழைத்து இயற்கைக்கு புறம்பான காரியத்தில் பாதிரியார் ஈடுபட்டதாகவும் கூறியிருக்கிறார். இதனால் மனதளவிலும் உடலளவிலும் தான் மிகுந்த அவதிக்குள்ளாகி துன்பப்பட்டதாகும் தன் சோகத்தை வெளிப்படுத்தி உள்ளார். இந்த சம்பவம் நடந்து முடிந்தது என்று அடுத்த இரண்டு வருடங்கள் கழித்து கடந்த 2000ம் ஆண்டு நடைபெற்ற சம்பவத்தைப் பற்றி தன் தாயாரிடம் அவர் கூறியிருக்கிறார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த தாயார், அந்த பாதிரியாருக்கு கடிதம் ஒன்று எழுதி இருக்கிறார் அந்த கடிதத்தில் அவர் செய்த தவறை சுட்டிக்காட்டி இருக்கிறார். இதனை பெற்றுக் கொண்ட அந்த பாதிரியார் அவரிடம் மன்னிப்பு கோரி கடிதம் எழுதியிருக்கிறார்.இந்த சம்பவம் லாசன்னே, ஜெனீவா மற்றும் ஃப்ரீபர்க் ஆகிய பகுதிகளின் கத்தோலிக்க ஆயர்களுக்கு தெரிய வந்தது.
இருப்பினும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் பாதிரியாருக்கு எதிரான ஆதாரங்கள் அனைத்தும் ஆய்வுக்குழு போலீசாரிடம் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது இதனையடுத்து அவர் திருச்சபையில் இருந்து அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.