ஹாஸ்டல் மாணவர்களுடன் ஓரினச்சேர்க்கை! கிறிஸ்தவ பாதிரியார் அரங்கேற்றிய கேவலமான செயல்!

கிருத்துவ பாதிரியார் ஒருவர் தான் நடத்திவரும் விடுதியில் தங்கியுள்ள 6 மாணவர்களை வற்புறுத்தி ஓரினசேர்க்கை உடலுறவில் ஈடுபட வைத்த சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரள மாநிலத்தில் பள்ளுறுதி பகுதியில் கிறுத்துவர்கள் சிலர் ஆண் மாணவர்களுக்கான விடுதியை நடத்தி வருகின்றனர். இந்த விடுதியில் பெரும்பாலும் பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்ட குடும்பத்திலிருந்து வரும் பிள்ளைகள் தங்குவதுண்டு. மாதத்திற்கு 250 ரூபாய் வசூலித்து பிள்ளைகளை விடுதி நிர்வாகம் கவனித்துக் கொண்டு வருகிறது.

பிள்ளைகள் விடுதியில் இருந்து தங்கள் பள்ளிக்கு செல்வது வழக்கமாகும். இதற்கு தலைமை பொறுப்பு வகிப்பவர் ஜார்ஜ் என்பவர். இவர் அந்த விடுதியின் தலைமை பாதிரியாராவார். இவர் கடந்த டிசம்பர் மாதம் முதல் விடுதியில் இருக்கும் சில ஆண்களிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். மேலும் அவர்களை பல்வேறு முறை யாருக்கும் தெரியாமல் ஓரினசேர்க்கை உடலுறவிற்கு நிர்ப்பந்தித்துள்ளார்.

மேலும் அந்த நிகழ்வுகளை யாரிடமும் கூறாமல் இருக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மோசமான நிகழ்வுகளை யாரிடமும் தெரிவிக்காமல் மறைத்து வந்தனர். இந்நிலையில் சென்ற வாரம் மாணவர்கள் விடுதிக்கு தாமதமாக வந்ததால் அவர்களை ஜார்ஜ் உள்ளே அனுமதிக்கவில்லை.

வெளியே இருந்த மாணவர்கள் எதேச்சையாக பேசிக்கொண்டிருந்தபோதுதான் மற்ற மாணவர்களும் துன்புறுத்தப்படுவது தெரியவந்துள்ளது. வார இறுதி நாட்களில் வீட்டுக்கு சென்ற மாணவர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை பற்றி பெற்றோரிடம் கூறியுள்ளனர். பெற்றோர்கள் இன்று காலை பள்ளுறுதி காவல் நிலையத்தில் ஜார்ஜ் மீது புகார் அளித்தனர்.

விசாரித்த காவல்துறையினர் அவர் மீது 377-ஆவது பிரிவின் கீழும், போஸ்கோ சட்டத்திலும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவமானது கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.