அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் ஓய்வு!

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் ஒரு நாள் போட்டிகளில் இருந்து தனது ஓய்வு குறித்து நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.


இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடர் முடிந்தவுடன் கிறிஸ் கெய்ல் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கிறிஸ் கெய்ல் போட்டி மற்றும் ஒரு நாள் போட்டிகளில் களம் இறங்கினாலே எதிரணியினர் முதலில் இவரை எப்படியாவது அவுட் ஆக்கி விடவேண்டும் என்று தன் எண்ணுவர். இல்லையெனில் இவர் எதிரணியை தனது அதிரடி ஆட்டத்தால் துவம்சம் செய்து விடுவார்.

இத்தகைய புகழை உடைய கிறிஸ் கெய்ல் கடந்த வருடம் வங்காளதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டியிலே கடைசியாக விளையாடினார். அதன் பின்பு காயம் காரணமாக விளையாடமல் இருந்தார்.

இந்நிலையில் இவர் உலகக்கோப்பையில் மீண்டும் களமிறங்கவுள்ளார். ஆனால் உலகக்கோப்பை தொடங்கும் முன்னரே இவர் தனது கடைசி தொடர் உலகக்கோப்பை தான் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

இவர் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 23 சதங்களை அடித்துள்ளார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக (476) சிக்ஸ்ர்கள் விளாசி முதலிடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.