2வது கல்யாணத்துக்கு ஓகே சொன்ன சின்ன தம்பி சீரியல் நடிகை! கணவன் யார் தெரியுமா?

சின்னத்திரை சீரியல் நடிகை பவானி ரெட்டி இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளார்.


விஜய் டிவியில் வெளியாகிவரும் சின்னத்தம்பி சீரியலில் நடிகை பவானி ரெட்டி தன்னுடைய சிறப்பான நடிப்பின் மூலமாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.

2013ம் ஆண்டு நடிகை பவானி ரெட்டி மற்றும் நடிகர் பிரதீபிற்கு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இடையே இருந்த குடும்ப பிரச்சனை காரணமாக 2017ம் ஆண்டு நடிகை பவானி ரெட்டியின் கணவர் பிரதீப் தற்கொலை செய்து கொண்டார். 

இதனால் மிகவும் துயரத்தில் இருந்த பவானி ரெட்டிக்கு அவரின் குடும்ப நண்பர் ஆனந்த் மிகவும் உறுதுணையாக இருந்து அவரிடம் அன்பு காட்டியுள்ளார். இதனால் குடும்ப நண்பர் ஆனந்த் மீது நடிகை பவானி ரெட்டிக்கு நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளது.இதனால் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், அவர்களது பெற்றோர்கள் முறைப்படி திருமணம் செய்து வைக்கப்போவதாகவும்  நடிகை பவானி ரெட்டி கூறியுள்ளார்.