வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் இல்லை! பின்வாங்கிய எஸ்ஆர்எம் பல்கலை! சாதித்த சின்மயி!

கவிஞர் வைரமுத்துவை பாடகி சின்மயி தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அசிங்கப்படுத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தனியார் பல்கலைக்கழகம் ஒன்று கவிஞர் வைரமுத்துவை கௌரவிக்கும் வகையில் டாக்டர் பட்டமளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு மத்திய ராணுவத் துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளதாக அழைப்பிதழ் வெளியாகியுள்ளது. இந்த அழைப்பிதழை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு சின்மயி தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். 

அந்த பதிவில், "9 பெண்கள் எதிராக பாலியல் குற்றம் சாட்டப்பட்ட கவிஞர் வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் அளிப்பதற்கு ராணுவத்துறை அமைச்சர் வருகிறார். பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எந்தவித தண்டனையும் கிடைப்பதில்லை. ஆனால் பாலியல் தொல்லைகளை அனுபவித்தவர்களுக்கு மட்டும் வேலை போய்விடுகிறது.

அவர் என்னை உட்பட 8 பெண்களை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்தார். பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது என்னுடைய மார்பகங்கள் மற்றும் கை பகுதிகளில் மட்டுமே பலர் வேண்டுமென்று படம் பிடித்தனர். எங்களிடம் அரசியல் உலகிலும் மிகவும் மதிப்புமிக்க இடத்தில் இருப்பதால் என்னை தேசிய விருதுக்கு பரிசீலிப்பதாக கூறி அணுகினார். வைரமுத்து இன்னொரு நபரை என்னிடம் அனுப்பி சமாதானம் பேச முயன்றார் ஆனால் நான் அந்த நபரை இந்த விஷயத்தில் இருந்து தள்ளியிருக்குமாறு ஒதுக்கி விட்டேன். 

இதனிடையே ராதாரவி என்னுடன் யாரையும் நடிக்க இயலாத வகையில் என்னை பற்றி அவதூறுகளை பரப்பி விட்டார்" என்று பரபரப்பாக கூறினார்.

இதே புகார்களை பல முறை தெரிவித்த பின்னரும் அவர் தற்போது தெரிவித்து அதற்கான காரணமானது வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்போகும் விழாவை தடுப்பதற்காகவே என்று கூறப்பட்டுள்ளது. 

இத்தகைய குற்றச்சாட்டுகளை நாள் இந்த விழாவில் கலந்து கொள்வதை ராணுவத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தவிர்த்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. வைரமுத்துவும் வேறொருவரின் கையால் விருதை வாங்க சம்மதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. 

இந்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.