என் மனைவியிடம் பலர் தவறாக நடந்து கொண்டனர்! சின்மயி கணவர் வெளியிட்ட ஷாக் தகவல்!

தன் மனைவியிடம் பல பேர் தவறாக நடந்து கொண்டதாகவும் அதனால் தான் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் சின்மயின் கணவர் கூறியுள்ளார்.


சின்மயி தமிழ் திரைப்பட திரை உலகில் பாடகியாக கண்ணத்தில் முத்தமிட்டாள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

சமீபத்தில் ஏற்பட்ட மீ் டு சர்ச்சையில் வைரமுத்துவின் மீது பாலியல் குற்றம் சாட்டினார் பாடகி சின்மயி. இந்த சம்பவம்  உலகம் முழுவதும் தீயாய் பரவ ஆரம்பித்தது. ஆனால் தற்போது இவை பற்றிய எந்த ஒரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை  .

பாடகி சின்மயியின் கணவர் ராகுல் தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகரான  நாகர்ஜுனாவை வைத்து மன்மதடு என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் இன்று வெளியிடப்படுகிறது.

இந்த திரைப்படத்தை குறித்து பேட்டி ஒன்றில் பங்கேற்ற போது பேசிய ராகுலிடம் சின்மயின் சர்ச்சை விவகாரத்தை பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது.

என் மனைவியை பற்றி கேலி கிண்டல் செய்பவர்களை என்னால் மன்னிக்க முடியாது. மேலும் என் மனைவியிடம் பலரும் தவறாக நடந்து கொள்ள முயற்சித்துள்ளனர், என்று கூறினார்.

ஆனால் இவை அனைத்தையும் கேட்டுக் கொண்டு  நான் அமைதியாக தான் இருப்பேன்.  இதற்கு பதில் கூறும் வகையில் என்னுடைய  திரைப்படத்தில் ஒரு சில காட்சிகள் அமைந்திருக்கும் என இயக்குனர் ராகுல் கூறியுள்ளார்.