நாஸ்தி பண்ணிடுவேன்! ஆளுங்கள அனுப்பி சிதைச்சிடுவேன்! சின்மயிக்கு பிரபல தயாரிப்பாளர் பகிரங்க மிரட்டல்!

நான் நினைத்தால் உன்னை ஆட்களை அனுப்பி சிதைத்து விடுவேன் என்று பிரபல தயாரிப்பாளர் ஒருவர் சின்மயியை பகிரங்கமாக மிரட்டியுள்ளார்.


கடந்த ஆண்டு மீடு சமயத்தில் பிரபல பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி அதிர வைத்தவர் சின்மயி. அண்மையில் கூட இனி வைரமுத்துவை எதிரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் அவர் கன்னத்தில் ஓங்கி ஒரு அரைவிட தயாராக இருப்பதாக சின்மயி கூறியிருந்தார். இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற சினிமா விழா ஒன்றில் பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் பங்கேற்று பேசினார்.

அப்போது மீடு என்கிற பெயரில் 15 வருடங்களுக்கு முன்பு எப்போதோ நடைபெற்றதாக ஒன்றைக் கூறி சமுதாயத்தில் மிக உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் வைரமுத்துவை கேவலப்படுத்தியதாக கூறினார். 15 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஒன்றைக் கூறி வைரமுத்துவை கேவலப் படுத்த வேண்டிய அவசியமென்ன உனது நோக்கம்தான் என்ன என்று சின்மயியை கே ராஜன் கேள்வி எழுப்பினார்.

நான் நினைத்தால் என்னுடைய ஏரியாவில் இருந்து சில பெண்களை அனுப்பி உன்னை நாஸ்தி செய்துவிடுவேன் என்று பகிரங்கமாக மிரட்டினார் ராஜன். அதுமட்டுமல்லாமல் சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவதற்கு வைரமுத்து எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் ஆனால் ஒரே ஒரு புகார் கூறி அவரை இப்படி கஷ்டப்பட வைத்துவிட்டதாகவும் சின்மயியை குற்றம் சாட்டினார்.

இனிக்கும் இதேபோல் சின்மயி தொடர்ந்து நடந்து கொண்டால் நாஸ்தி செய்துவிடுவேன் என்றும் பகிரங்கமாக கே ராஜன் மிரட்டல் விடுத்தார். சின்மயி இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து கே ராஜன் தனக்கு மிரட்டல் விடுத்துள்ளதாகவும் ஆனால் இதற்கு நான் என்ன பயப்படனுமா என்று கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார். சின்மயிக்கு ஆதரவாக இயக்குனர் ரஞ்சித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.