சீனர்கள் தேயிலையை மருத்துவ குணமுள்ள மூலிகையாகவே மதிக்கிறார்கள்!! ஏன் தெரியுமா?

சுறுசுறுப்புக்கும் தேநீருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதனால்தான் வேலைப்பளு நிறைந்தவர்கள் அவ்வப்போது தேநீர் குடிக்கிறார்கள். தேயிலை முதன்முதலில் சீனாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை சீனர்கள் மருத்துவ குணமுள்ள மூலிகையாகவே மதிக்கிறார்கள்.


தேயிலை செடியின் நுனியிலுள்ள இலையரும்பையும், அதற்கு அடுத்துள்ள இரண்டு இளம் இலைகளையும் பறித்து உலரவைத்து, நொதிக்கச்செய்து தூளாக்கி தேயிலை தயார் செய்யப்படுகிறது.

• மன அழுத்தத்தையும் கோப உணர்ச்சியையும் கட்டுப்படுத்தும் தன்மை தேயிலையில் இருக்கிறது.

• சுறுசுறுப்பு ஏற்படுத்துவதுடன் ரத்தக்குழாய்கள் சிறப்பாக செயல்படவும் உதவி செய்கிறது தேயிலை.

• கொழுப்பு அளவு குறைவாக இருப்பதால் உடல் எடை குறைப்பதற்கு உதவி செய்கிறது.

• தேயிலையில் ஃபுளோரைடு நிரம்பியிருப்பதால் பற்கள் சொத்தையாகாமல் தடுப்பதற்கு உதவுகிறது.

தேநீரை பால் சேர்க்காமல் குடிப்பதும் சர்க்கரைக்குப் பதில் தேன் அல்லது வெல்லம் கலந்து அருந்துவதும் அதிக பலன் தருகிறது. நீரிழிவு மற்றும் ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள் தேநீர் குடிக்காமல் இருப்பது நல்லது.