சீனா நாட்டின் வூஹான் நகரில் மனிதர்கள் மூலமாக தான் கொரோனா வைரஸ் உற்பத்தியானது என்று பிரெஞ்ச் நாட்டு நோபல்பரிசு அறிஞர் கூறியிருப்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் ஆய்வகத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்டது தான் கொரோனா வைரஸ்! சற்று முன் வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!

கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 1,54,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 22,48,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
2008-ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டில் "எயிட்ஸ்" நோய் பரவியதை முதன்முதலில் பிரெஞ்சு நாட்டு நுண்கிருமி அறிஞர் லூக் மோண்டேக்னர் கண்டுபிடித்து கூறினார். இதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்நிலையில் உலகை ஆட்டிப்படைத்து வரும் இந்த கொரோனா வைரஸை சீனா நாட்டில் இருந்து மனிதர்கள் பரப்பியதாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதாவது, சீனா நாட்டில் வூஹான் மாகாணத்தில் "மெடிக்கல் இன்ஸ்டியூட் ஆஃப் வைராலஜி" இயங்கி வருகிறது. இங்கு அறிஞர்கள் பலர் பல்வேறு விதமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த அறிஞர்கள் செய்த சிறு தவறினாலேயே கொரோனா வைரஸ் பரவி இருக்கக்கூடும் என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாக இங்கு இது போன்ற வைரஸ்களை ஆராய்ச்சி செய்து வருவதாகவும், அப்போது ஏற்பட்ட சிறு தவறுகளாலேயே இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இவருடைய வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.