99.9 சதவீதம் செயல் திறன்! கொரோனாவை செயல் இழக்க வைக்கும் மருந்தை கண்டுபிடித்தது சீனா!

கொரோனா வைரஸை முற்றிலும் அழிப்பதற்கான மருந்தை சீனா நாட்டின் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 33,500-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 7,20,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

முதன்முதலாக பாதிக்கப்பட்ட சீனா கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு தற்போது கிட்டத்தட்ட முழுவதுமாக வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்திவிட்டது. இதனிடையே மேலும் ஒரு ஆச்சரியமான தகவல் வெளியாகியுள்ளது. 

சீனா நாட்டிலுள்ள அன்ஹுய் மாகாணத்தில் செயல்பட்டு வரும் ஒரு ஆராய்ச்சி மையத்தில் இந்த வைரஸ் தாக்குதலை முற்றிலும் அழிக்கத்தக்க மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாகாணத்தில் அமெரிக்காவின் முன்னணி தேசிய பொது சுகாதார நிறுவனமான நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அமைந்துள்ளது.

இந்த ஆராய்ச்சியகமானது சீனாவின் சிந்தனை கழகத்தின் கீழே செயல்பட்டு வரும் "டேலியன் இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் இயற்பியல்" ("Dalian Institute of Chemical Physics") என்ற ஆராய்ச்சி இயக்கத்துடன் இணைந்து கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டு பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்விரு ஆய்வகங்களும்  கொரோனா வைரஸில் இடம்பெற்றுள்ள நானோ பொருட்களை 96.5% முதல் 99.9% வரை அழிக்க இயலும் என்ற அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையானது உலக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது