இளைஞனின் ஆசன வாய் வழியாக வயிற்றுக்குள் நுழைந்த மீன்..! X-Rayவை பார்த்து அதிர்ந்த டாக்டர்கள்! என்னாச்சு தெரியுமா?

சீனாவை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ஆசனவாய் வழியாக வயிற்றுக்குள் சென்ற மீனை, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தெற்கு சீனாவில் அமைந்திருக்கும் குவாங்டங் மாகாணத்தில் சாயோகிங் என்னும் பகுதி அமைந்திருக்கிறது. இந்தப் பகுதியில் இருக்கும் பிரசித்தி பெற்ற மருத்துவமனையில் 30 வயது சீன இளைஞர் ஒருவர் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டு அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது வயிற்று வலிக்கான காரணத்தை மருத்துவர்கள் கண்டறிய பல வழிமுறைகளை யோசித்தனர். கடைசியில் அந்த இளைஞருக்கு எக்ஸ்ரே செய்து பார்க்கப்பட்டது. எக்ஸ்ரேவின் முடிவில் மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அதாவது அந்த இளைஞரின் வயிற்றை எக்ஸ்-ரே செய்து பார்த்தபோது அவரது வயிற்றில் மீன் ஒன்று இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து அந்த நபரிடம் மருத்துவர்கள் விசாரித்த பொழுது அவர் பல திடுக்கிடும் தகவலை கூறியிருக்கிறார். இந்த சம்பவத்திற்கு முன்னர் அந்த இளைஞர் தவறுதலாக திலிபியா என்ற வகையான மீன் மீது அமர்ந்திருக்கிறார். அப்பொழுது அந்த மீன் அவருடைய ஆசனவாய் வழியாக உடலுக்குள் சென்று விட்டது. அந்த இளைஞர் எவ்வளவோ முயற்சி செய்தும் அதனை வெளியே எடுக்க முடியாமல் அவதிப் பட்டிருக்கிறார். 

அந்த இளைஞரின் வயிற்றுக்குள் இருந்த மீனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் வெளியே எடுக்கலாம் என்று முடிவு செய்து அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த இளைஞருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து மீனை வெளியே எடுத்து உள்ளனர். அந்த இளைஞரின் வயிற்றில் இருந்த மீனின் அளவு 12 முதல் 16 இன்ச் வரை இருக்கும் என கூறப்படுகிறது. அந்நாட்டு ஊடகம் இதுவரை அந்த இளைஞரின் தற்போதைய நிலை குறித்து செய்தி வெளியிடாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.