பாம்பை பிடித்து அதன் அந்த உறுப்பை சமைத்து சாப்பிட்ட நபர்..! பிறகு அவருக்கு ஏற்பட்ட விபரீதம்! எங்கு தெரியுமா?

சுவாச கோளாறால் அவதிப்பட்டு வந்த இளைஞரது  ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்த சம்பவமானது சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கிழக்கு சீனாவில் ஜியாங்குஸா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட ஸ்குய்யான் நகரத்தை சேர்ந்தவர் வேங். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கடந்த பல மாதங்களாக சுவாசக்கோளாறு சம்பந்தமாக பலமுறை சென்றுள்ளார். மருத்துவர்கள் அவருடைய உணவுப்பழக்கங்களை கேட்டபோது பெரும்பாலும் கடல் நண்டுகள், நத்தைகள் சாப்பிடுவதாக கூறிய அவர், ஒருமுறை பாம்பை பச்சையாக அதன் பித்தப்பையுடன் சேர்ந்து சாப்பிட்டதாகவும் கூறியுள்ளார்.

உடனடியாக மருத்துவர்கள் அவருடைய நுரையீரலை ஸ்கேன் செய்து பார்த்தபோது பேரதிர்ச்சி அடைந்தனர். முழுவதும் ஒரு வகையான புழுக்களினால் சூழ்ந்திருப்பதை கண்டு திகைத்தனர். "பாராகோனிமியாஸிஸ்" (paragonmiasis) என்று அழைக்கப்படும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

அதாவது அசுத்தமான தண்ணீரை குடிப்பதாலும், நாடாப்புழு முட்டைகளை கொண்ட கடல் உணவை சாப்பிடுவதாலும் காய்ச்சல் ஏற்பட்டு அதன் மூலம் இது போன்ற புழுக்கள் நுரையீரலில் அதிகளவில் வளரக்கூடும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

சமைக்காத உணவு பொருட்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்ததால் அவருடைய முக்கியமான உறுப்பு பெரிதளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

ஏற்கனவே சீன மக்களின் உணவுப்பழக்கங்களாளேயே கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுக்க பரவியதாக மக்கள் எண்ணி கொண்டிருக்கையில், இதுபோன்று செய்திகள் அவற்றை நிரூபிக்கும் வகையில் அமைந்திருப்பதாக சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.