10 ஆண்டுகள் கோமா! திடீரென கண்விழித்த கணவன்! மனைவியை பார்த்து கூறிய ஒரே ஒரு வார்த்தை! நெகிழ்ச்சி சம்பவம்!

நீண்ட நாட்களாக கோமாவில் இருந்த கணவர்  நினைவு திரும்பிய பிறகு கூறிய வார்த்தையானது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.


சீனா நாட்டில் ஹுபே என்னும் பிராந்தியம் அமைந்துள்ளது. இங்கு லீ என்பவர் வசித்து வந்தார். 2009-ஆம் ஆண்டில் இவருக்கு விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்டதில் தலையில் பலத்த காயமடைந்ததால் கோமாவிற்கு சென்றார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மருத்துவமனையிலேயே வைத்து பார்த்துக் கொண்டால் தான் உயிர் பிழைக்க முடியும் என்று கூறினர். அவருக்கு பிடித்தமான வார்த்தைகளையும் செயல்களையும் அவருக்கு அருகிலிருந்து செய்து வர வேண்டும் அப்போதுதான் அவர் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்ப மெலிந்த வாய்ப்புள்ளது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இல்லையென்றால் அவர் வாழ்நாள் முழுவதும் படுத்த படுக்கையிலேயே நினைவின்றி இருப்பார் என்றும் கூறியுள்ளனர். 

ஆனால் லீயின் மனைவி அவரை வீட்டிற்கு அழைத்து சென்றார். அனைவரும் பொறாமைப் படும் வகையில் தன்னுடைய கணவரை அழகாக கவனித்து வந்தார். தினமும் 2 அல்லது 3 மணி நேரம் மட்டுமே தூங்கினார். 

இந்நிலையில் திடீரென்று ஒரு நாள் லீக்கு நினைவு திரும்பியது. நினைவு திரும்பியவுடன் முதன்முதலாக மனைவியிடம் "நான் உன்னை மனதார காதலிக்கிறேன்" என்று கூறியுள்ளார். தற்போது லீ கொஞ்சம் கொஞ்சமாக உடல்நலம் முன்னேறி வருகிறார். தற்போது அவர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவமானது லீயின் குடும்பத்தாரிடம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.