நாய், பூனைக் கறிக்கு தடை..! சீனா எடுத்த திடீர் முடிவு! காரணம் என்ன தெரியுமா?

உலகையே உலுக்கிய கொரோனாவின் எதிரொலியை அடுத்து சீன நகரமாகிய Shenzhen - யில் செல்லப்பிராணிகளை உண்ணுவதற்கு தடை விதித்து சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. இந்த சட்டத்தினை தற்போது அனைவராலும் வரவேற்கப்பட்டு வருகின்றது.


இன்று உலகம் முழுவதும் ஜெபிக்கப்படும் வார்த்தையாக மாறியுள்ள கொரோனா வைரஸ் (கோவிட்-19), முதன் முதலில் சீனாவின் ஊகான் நகரத்தில் தான் கண்டு அறியப்பட்டது. இது ஏற்படுத்திய மோசமான தாக்கத்திற்குப் பின்பு தான் ( கோவிட்-19) பெயர் வைக்கப்பட்டது. மேலும், 31 டிசம்பர் 2019 அன்று உலக சுகாதார அமைப்பால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இப்படி உலகையை உலுக்கிய கொடிய கொரோனா வைரஸ் வருவதற்கு முக்கிய காரணம் சீனர்களின் உணவு பழக்க வழக்கங்கள் தான் என்று உலக நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றது. அவர்களுகும் அதற்கு ஏற்றவாறு கண்ணில் பட்ட விலங்குகளையெல்லாம் சாப்பிட்டு வருகிறார்கள்.

இதனையடுத்து, சீன நகரம் ஒன்றில், இனி நாய்களையும் பூனைகளையும் உண்ணக்கூடாது என்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் விலங்குகள் நல ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக பல முயற்சி செய்து வந்தனர். தற்போது இந்த கொரோனா வைரஸினால் தான் இதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

13 மில்லியன் குடிமக்களைக் கொண்ட Shenzhen நகரில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அவையில் உள்ள உறுப்பினர்கள் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளார்கள். இந்த சட்டத்தில் நாய்கள் மட்டுமின்றி, பாம்புகள், தவளைகள் மற்றும் ஆமைக்கறி உண்ணுவதற்கும் தடை விதித்துள்ளார்கள்.

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த சட்டம் மே மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து அமுலுக்கும் வருகிறது. மேலும், வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு என அந்நகரத்தின் தொண்டு நிறுவனம் மற்றும் நாட்டு மக்களுக்கும் இந்த சட்டத்தை வரவேற்று வருகின்றனார்.