சீன ராணுவத்தின் கொடூர தாக்குதல்..! இந்திய வீரர்கள் 20 பேர் வரை வீரமரணம்..! பதற வைக்கும் தகவல்!

லடாக்கில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் மூன்று பேர் வீர மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் அந்த எண்ணிக்கை 20 வரை இருக்கும் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.


லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்கள் முகாம்களுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி இந்திய - சீன ராணுவ வீரர்கள் கை கலப்பில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

கற்கள் மற்றும் கம்புகளை கொண்டு கொடூரமாக இந்தியா - சீனா ராணுவத்தினர் தாக்கிக் கொண்டதாகவும் கூறப்பட்டது. இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் ஒரு அதிகாரி உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்ததாக பிற்பகலில் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்திய வீரர்கள் சுமார் 20 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை மேலும் உயரவும் வாய்ப்பு உள்ளதாக ஏஎன்ஐ கூறியுள்ளது. அதே சமயம் இந்திய வீரர்கள் தாக்குதலில் சீன வீரர்கள் சுமார் 43 பேர் வரை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் ஏஎன்ஐ தெரிவித்துள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியான பிறகே எத்தனை பேர் உயிரிழந்தனர் என்கிற தகவல் முழுமையாக தெரிய வரும்.