லடாக்கில் இந்திய ராணுவம் பதிலடி..! சீன ராணுவ வீரர்கள் 43 பேர் பலி..! அதிகரிக்கும் பதற்றம்!

லடாக்கில் நடைபெற்ற மோதலில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 43 சீன ராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


லடாக்கில் நேற்று இரவு இந்திய - சீன ராணுவத்தினர் இடையே மோதல் வெடித்தது. துவக்கத்தில் கை கலப்பாக தொடங்கிய இந்த மோதல் பின்னர் பெரும் வன்முறையாகியுள்ளது. கற்கள் மற்றும் கட்டைகளை கொண்டு இரு நாட்டு ராணுவ வீரர்களும் கொடூரமாக தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் 20 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. ஆனால் சீன தரப்பில் எத்தனை வீரர்கள் பலி என்கிற தகவல் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் இந்திய ராணுவம் சீனத்தரப்பில் நடத்திய ரகசிய விசாரணையில் அந்நாட்டைச் சேர்ந்த 43 வீரர்கள் மோதலில் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இரு நாடுகளையும் சேர்ந்து மொத்தமாக ஒரே நாளில் 63 பேர் பலியாகியுள்ளதால் லடாக்கில் பதற்றம் நீடிக்கிறது. துவக்கத்தில் நான்கு அல்லது ஐந்து பேர் தான் மரணம் என்பதால் பெரிய அளவில் மக்கள் பொருட்படுத்தவில்லை. ஆனால் மொத்தமாக 63 பேர் உயிரிழந்துள்ளதால் லடாக் விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.