சோப்பும் போடுவேன்..! துணியும் துவைப்பேன்..! மனிதர்களை மிரள வைக்கும் சிம்பான்சி குரங்கு! வைரலாகும் வீடியோ!

சிம்பன்சி குரங்கானது துணி துவைத்து அசத்தும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


சீனா நாட்டில் லோகோஜாய் வன உயிரியல் பூங்கா செயல்பட்டுவருகிறது. இந்தப் பூங்காவில் 18 வயதான ஆண் சிம்பன்சி குரங்கு வாழ்ந்து வருகிறது. அந்த குரங்கின் பெயர் யூகுய். இந்தாண்டு தொடக்கத்தில் சிலர் சலவை தொழிலாளிகள் அந்த குரங்குக்கு துணி துவைக்க கற்றுக்கொடுத்தனர். 

அவர்கள் கற்றுக் கொடுத்தது மிகவும் உன்னிப்பாக கவனித்து வந்த யூகுய், தற்போது தன் கைக்கு கிடைக்கும் துணிகளை சோப்பு போட்டு பிரமாதமாக துவைத்து வருகிறது. மேலும் மனிதர்களின் பிற செயல்களையும் கவனித்து வரும் இந்த குரங்கானது, கை தட்டுதல், தண்டால் எடுத்தல் ஆகியவற்றையும் சிறப்பாக செய்து வருகிறது.

இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.‌