மலம் கழிக்கச் சென்ற தலித் சிறுமிகள்! பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம்! பிறகு ஒரே அடி! உயிரை குடித்த ஜாதி வெறி!

பொதுவெளியில் மலம் கழித்த சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவமானது மத்திய பிரதேச மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மத்திய பிரதேச மாநிலத்தில் பாவ்கேனி என்ற கிராமம் அமைந்துள்ளது‌. இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் ரோஷானி என்ற 12 வயது இளம்பெண் மற்றும் அவினாஷ் என்ற 10 சிறுவனுமாவர். சில நாட்களுக்கு முன்னர் இவ்விருவரும் அப்பகுதியின் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு அருகே பொதுவெளியில் மலம் கழித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை பார்த்த ஒரு மர்ம கும்பல் இருவரையும் கடுமையாக தாக்க தொடங்கியது. 2 சிறுவர்களும் அவரை தாங்க இயலாமல் மயங்கி விழுந்தனர். அப்போது பொதுமக்கள் அவர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர்கள் உயிரிழந்தனர்.

இந்த சம்பவமானது மத்திய பிரதேசத்தில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஹக்கீம் யாதவ், ராமேஷ்வர் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கொலை செய்யப்படுவதற்கு முன்பாக ரோஷானி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அவருடைய அண்ணன் கூறியுள்ளார். அதாவது, "நான் அங்கு சென்று பார்த்த போது அவளுடைய ஆடைகள் கிழிந்து இருந்தன. மேலும் பேண்டியின் கயிறு முற்றிலும் அறுந்திருந்தது. இதனால் பலாத்காரம் செய்யப்பட்ட பின்னரே ரோஷானி கொலை செய்யப்பட்டிருக்கிறார்" என்று கூறினார்.

ரோஷானியின் அண்ணி, "ரோஷானி ஒரு சில நாட்களுக்கு முன்னர் என்னிடம் அழகு கொண்டே வந்து ஹக்கீம் யாதவ் தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்துவதாக அழுது கொண்டே கூறினார். நான் தான் பிரச்சனை வேண்டாம் என்று என்னுடைய கணவரிடம் சொல்லாமல் தவிர்த்து விட்டேன்" என்று கூறியுள்ளார்.

காவல்துறையினருக்கு பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் எதுவும் வரவில்லை. அவ்வாறு நிகழ்ந்திருந்தால் விசாரணையில் தெளிவாக தெரிந்துவிடும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இந்த சம்பவமானது மத்தியபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.