கொரோனா ஊரடங்கு..! மோடி தொகுதியில் உணவு கிடைக்காமல் புல்லை சாப்பிட்ட சிறுவர்கள்! அதிர வைக்கும் உண்மை பின்னணி!

கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள ஊரடங்கினால் உன்ன உணவு கிடைக்காமல் சிறுவர்கள் புற்களை தின்ற சம்பவமானது அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 29,500-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 6,00,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இந்த நோய் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக 24-ஆம் தேதியன்று இந்திய பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தினார். அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் வசித்துவரும் அன்றாட கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் பெரிதளவில் பாதித்துள்ளனர்.

இவர்களுக்கு அரசாங்கம் எந்தவித உதவியும் செய்து தராத நிலையில், அன்றாட உணவிற்காக பெரிதளவில் சிரமப்பட்டு வருகின்றனர். எடுத்துக்காட்டாக பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியை சேர்ந்த முஷார் சமூகத்தை சேர்ந்த மக்கள் உண்ண உணவின்றி அல்லாடி வருகின்றனர். 

இதனால் அந்த சமூகத்தை சேர்ந்த சிறுவர்கள் "அக்ரி" என்று புல் வகையை உப்புடன் சேர்த்து சாப்பிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. அப்பகுதியில் வசித்து வந்த 10 குடும்பங்களும் இதேபோன்று பொருட்களை சாப்பிட்டு நாட்கள் கழித்து வந்த செய்தியானது நாடு முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடனடியாக வாரநாசி நகர நிர்வாகிகள் குறித்த குடும்பங்களுக்கு பொருட்களை வழங்கிவிட்டதாக கூறினர். ஆனால் 21 நாட்கள் நிலவப்போகும் இந்த ஊர் அடங்கி இருக்கு வெறும் 15 கிலோ உணவுப் பொருட்களை 10 குடும்பங்களும் பகிர்ந்து கொள்ளும்படி அளித்துவிட்டு சென்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன.

ஆனால் உண்மையில் சிறுவர்கள் சாப்பிடுவது புல் இல்லை என்று தெரியவந்துள்ளது. தானியங்ககளை அறுவடை செய்த பிறகு அதனோடு சேர்ந்து வரும் புல் போன்ற இந்த தாவரத்தை சாப்பிடுவது அப்பகுதி மக்ககளின் வழக்கம் என்றும், இதனை மறைத்து சிறுவர்கள் புல்லை பசியில் சாப்பிட்டதாக சிலர் மோடிக்கு எதிராக அவதூறு பரப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.