காருக்குள் கருகிய 2 குழந்தைகள்! அடுத்தடுத்து நிகழ்ந்த 2 பதற வைக்கும் சம்பவங்கள்! அதிர வைக்கும் காரணம்!

காருக்குள் இருந்த குழந்தைகள் வெப்ப தாக்கத்தினால் உயிரிழந்த சம்பவமானது அமெரிக்காவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்கா நாட்டில் நியூஜெர்ஸி மாகாணம் அமைந்துள்ளது. இங்கு புகழ்பெற்ற லிண்டுவெல் ரயில் நிலையமுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று ரயில் நிலையத்தின் வாயிலில் ஒரு கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அந்த காரில் 22 மாத பெண் குழந்தையான மில்லியாணி இருந்துள்ளது. குழந்தையின் தந்தை சிறையில் உள்ளார். குழந்தையானது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்க்கப்பட்டு வந்தது. உறவினர்களில் அலட்சியத்தால் சுமார் 8 மணி நேரம் 92 ஃபாரன்ஹீட் வெப்பத்தில் குழந்தை காருக்குள்ளேயே இருந்து கருகி உயிரிழந்தது.

இந்த பேர சம்பவம் நிகழ்ந்த ஒரு மணிநேரத்திற்குள்ளேயே மிசிசிபி மாகாணத்தில் இதே போன்ற நிகழ்வு ஏற்பட்டுள்ளது. அதாவது 21 மாத குழந்தையை மழலையர் காப்பகத்திற்கு பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர். ஆனால் குழந்தை காரை விட்டு இறங்கிவிட்டதாக நினைத்துக் கொண்ட பெட்ரோல் காரை அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர்.

பின்னர் மீண்டும் அலுவலகத்திலிருந்து குழந்தை காப்பகத்தின் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு சென்றனர். பல மணி நேரம் கழித்தே குழந்தை காரினுள் இருந்தது பெற்றோர் கண்டுபிடித்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக குழந்தை இறந்திருந்தது. பல மணி நேரம் காருக்குள்ளேயே இருந்ததால் குழந்தை இறந்திருக்கலாம் என்று காவல்துறையினர் வியூகிக்கின்றனர்.

ஆகஸ்ட் மாதத்தில் மட்டுமே இதே காரணத்திற்காக சுமார் பத்து குழந்தைகள் இறந்துள்ளன. இந்த சம்பவங்களானது அமெரிக்காவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியன.