அழுத குழந்தையை சமாதானப்படுத்திய பெண்! குழந்தை திருடி என்று அடித்து உதைத்த கொடூரம்!

குழந்தையை கடத்தி வந்ததாக தவறுதலாக எண்ணி பொதுமக்கள் ஒரு பெண்ணை அடித்து துன்புறுத்தியிருப்பது ஜார்க்கண்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஜார்க்கண்ட் மாநிலத்தில் கிரிதி எனும் மாவட்டம் அமைந்துள்ளது. 2 வயது குழந்தையுடன் தாய் ஒருவர் இப்பகுதிக்கு வந்திருந்தார். வங்கியிலிருந்து பணம் எடுப்பதற்காக தாய் சென்றுள்ளார். ஆனால் பொறுப்பில்லாத வகையில் குழந்தையை நடுரோட்டில் விட்டு சென்றுள்ளார். குழந்தை உடனே அழ தொடங்கியது.

இந்த சம்பவத்தை கண்ட ஒரு நடுத்தர வயது பெண் குழந்தையை சமாதானப் படுத்துவதற்காக பேச்சுக்கொடுத்துள்ளார். இதனை கண்ட குழந்தையின் தாய் அந்தப் பெண் தன் குழந்தையை கடத்த உள்ளதாக எண்ணிக்கொண்டு அலறினார்.

இதனை கேட்ட பொதுமக்கள் அந்தப் பெண்ணை சரமாரியாக அடித்து உதைத்தனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது "குழந்தையின் தாய் பொறுப்பில்லாமல் விட்டு சென்றதால் குழந்தை அழுது கொண்டிருந்தது. குழந்தையை சமாதானப் படுத்துவதற்காகவே நான் பேச்சு கொடுத்தேன்" என்று கூறியுள்ளார்.

காவல்துறையினர் பொதுமக்களை அப்பகுதியில் இருந்த அகற்றினர். மேலும் தவறான என்ன ஓட்டத்தினால் அந்தப் பெண் தாக்கப்பட்டதை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

இந்த சம்பவமானது ஜார்க்கண்ட் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.