பிறந்த அடுத்த நிமிடம்! 21 மாடி கட்டிடத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண் குழந்தை! நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்!

சில மணிநேரங்களுக்கு முன்னர் பிறந்த குழந்தைகளை அடையாளம் தெரியாத நபர் 21 மாடி கட்டிடத்தில் இருந்து கீழே வீசியுள்ள சம்பவமானது மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மும்பை மாநகரின் புறநகர் பகுதிகளில் ஒன்று கண்டிவாலி. இங்கு லால்ஜி படா என்ற இடத்தில் குடிசை மாற்று வாரியம் வீடுகளை கட்டி வருகிறது. இந்த வீடுகளுக்கு மத்தியில் மிகப்பெரிய 21 தளம் கொண்ட ஃபிளாட் அமைந்துள்ளது. இந்த வீடானது ஜெய் பாரத் காம்ப்ளக்ஸ் எனும் இடத்தில் அமைந்துள்ளது. 

இன்று காலை திடீரென்று மிக உயரத்திலிருந்து கைக்குழந்தை ஒன்று தூக்கி வீசப்பட்டுள்ளது.  இந்த சம்பவத்தை அந்த அப்பார்ட்மெண்டின் காவலாளி பார்த்து அங்குள்ளவர்களை அழைத்து வந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அப்பகுதி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். குழந்தையை யார் வீசினார் என்பதும், எங்கிருந்து வீசப்பட்டது என்பதும் காவல்துறையினருக்கு இன்னமும் தெரியவரவில்லை. காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்து பார்த்து வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், அந்த குழந்தை பிறந்து சில மணி நேரங்களில் தூக்கி வீசப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த சம்பவமானது மும்பை புறநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.