5வது மாடியில் இருந்து கீழே விழுந்த 11 மாத குழந்தை! பதறிய தாய்! ஆனால் கடவுள் இருப்பதை உறுதிப்படுத்தும் சம்பவம்!

5-வது மாடியிலிருந்து குழந்தை ஒன்று ஜன்னல் வழியே தவறி விழுந்த சம்பவமானது உக்ரைன்  நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உக்ரைன் நாட்டில் யூலியா ரோகக் என்ற பெண்மணி வசித்து வருகிறார். இவருடைய வயது 21. இவருக்கு 11 மாதமாகிய டெம்பியான் என்ற ஆண் குழந்தை உள்ளது. வீட்டிலுள்ள பாத்திரங்களை மும்முரமாக கழுவி கொண்டிருந்தார். 

எதிர்பாராவிதமாக டெம்பியான் வீட்டின் ஜன்னலை திறந்து கொண்டு வெளியே குதித்துள்ளான். டெம்பியான் கீழே குதித்தபோது யூலியா பார்த்து பதறி அடித்து ஓடியுள்ளார். அதிர்ஷ்டவசமாக குழந்தை கீழ் பகுதியில் இருந்த துணி காய வைக்கும் கயிற்றில் சிக்கி கொண்டது. யூலியாவால் குழந்தை கீழே தொங்கிக்கொண்டிருப்பதை காண இயலவில்லை. 

குழந்தை அந்தரத்தில் தொங்கி கொண்டிருப்பதை கண்ட 2 ஆண்கள் குழந்தையை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஒருவர் மேலே ஏறி குழந்தையை காப்பாற்ற முயன்றார். இன்னொருவர் குழந்தை கீழே விழுந்தால் பிடிப்பதற்கு தயாராக இருந்தார்.

பார்க்க இயலாமல் யூலியா கண்களை மூடிக்கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து கண்களை திறந்து பார்த்தபோது குழந்தை அந்த இருவரின் கைகளில் இருந்துள்ளது. பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது குழந்தையின் வயிற்றுப் பகுதியில் லேசாக அடிபட்டிருந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். கீழே குதித்து குழந்தை உயிர் பிழைத்த அதிசயமானது உக்ரைன் நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.