கணவனின் தம்பியுடன் தகாத உறவு! கர்ப்பமான மனைவி! குழந்தை பிறந்த 2 நாளில் அரங்கேற்றிய படு பாதகம்!

பிறந்து 2 நாட்களே ஆன குழந்தையை, பெற்ற தாயே கொலை செய்த சம்பவமானது திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருவண்ணாமலை மாவட்டத்தில் சேவூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் சோலையம்மாள். இத்தம்பதியினருக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் 5-வது முறையாக கர்ப்பமான இவர் ஆரணி அரசு பொது மருத்துவமனையில் 14-ஆம் தேதியன்று குழந்தை பெற்றார். 

16-ஆம் தேதியன்று குழந்தையுடன் சோலையம்மாள் மாயமானார். மருத்துவ அதிகாரிகள் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் சோலையம்மாவை வலைவீசி தேடி வந்தனர். சோலையம்மா சென்னையில் இருப்பதை அறிந்து கொண்ட காவல்துறையினர் அவரை தேடி கண்டுபிடித்து  விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தனக்கு குமாரின் சகோதரரான பாபு என்பவர்கள் தகாத உறவு இருந்ததாகவும், அந்த உறவின் மூலம் ஆகவே 5-வது குழந்தை பிறந்ததாகவும் கூறினார். சோலையம்மாவும், பாபுவும் ஒருங்கிணைத்து குழந்தையை கொன்று விடு முடிவு செய்தனர். அதன்படி மருத்துவமனையிலிருந்து வெளியேறிய பிறகு, சேவூர் கிராமத்தில் உள்ள ஒரு முட்புதரில் வைத்து மூச்சு திணறடித்து கொலை செய்து அங்கேயே புதைத்தனர். பின்னர் பாபுவும் கைது செய்யப்பட்டார்.

உடனடியாக காவல்துறையினர் இருவரும் கூறிய இடத்திற்கு சென்று புதைந்திருந்த குழந்தையின் சடலத்தை மீட்டு எடுத்தனர். பின்னர் குழந்தையை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது திருவண்ணாமலை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.