குழந்தை இறந்ததாக கருதிய 30 நிமிடத்தில் மீண்டும் சுவாசித்த சம்பவமானது பிரிட்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இறந்தே பிறந்த குழந்தை! அரை மணி நேரமாக மூச்சே இல்லை! அதன் பிறகு துள்ளிக்குதித்த தாய் - தந்தை! காரணம் இது தான்!

பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர் அலெக்ஸ் கெல்லி. இவருடைய வயது 25. ஜூன் மாதத்தில் இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் தொப்புள் கொடியானது குழந்தையின் கழுத்தை சுற்றி இருப்பதாக கூறியுள்ளனர். மேகம் குழந்தை உயிர் பிழைப்பது கடினம் என்றும் பெற்றோரை எச்சரித்திருந்தனர்.
கெல்லி உடனடியாக நார்த்தும்ரியா ஸ்பெஷலிஸ்ட் அறுவை சிகிச்சை மருத்துவமனையிலிருந்து நியூகாஸ்ட்ல் மருத்துவமனைக்கு இடம் பெயர்ந்தார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கெல்லிக்கு குழந்தை பிறந்தது. ஆனால் பிறந்த 28 நிமிடங்களுக்கு குழந்தை எந்தவித அசைவுமின்றி மூச்சுவிட இயலாமல் இருந்தது.
இதனால் குழந்தை உயிரிழந்ததாக கருதி மருத்துவர்கள் கெல்லியின் உறவினரிடம் வேதனைப்பட்டுள்ளனர். ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே குழந்தை சாதாரணமாக மூச்சுவிடத் தொடங்கியது.
இந்த சம்பவத்தை பெற்றோரிடம் மருத்துவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக கூறினர். சோக மேகங்கள் சூழ்ந்திருந்த மருத்துவமனையில் இந்த செய்தி அறிந்தவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவமானது பிரிட்டன் நாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.