கழிவறை கோப்பைக்குள் குழந்தையை அழுத்திய தாய்! பிரசவித்த மறுநிமிடம் அரங்கேற்றிய பகீர் செயல்! அங்கு சென்றவர்கள் கண்ட காட்சி!

தாய் ஒருவர் சின்னஞ்சிறு குழந்தையை கழிவறை குழிக்குள் போட்டு கொலை செய்ய முயன்ற சம்பவமானது ஹாண்டுராஸ் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஹாண்டுராஸ் நாட்டில் சவுட்லேகா  என்ற நகரம் அமைந்துள்ளது. இப் பகுதியை சேர்ந்தவர் தில்சியா மரியா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் அங்குள்ள மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக சென்றுள்ளார். அப்போது அவருக்கு கழிவறைக்குள் குழந்தை பிறந்துள்ளது. கழிவறை உள்ளிருந்து வெளியான ரத்தத்தை டோரிஸ் என்ற பெண் பார்த்துள்ளார்.

உடனடியாக கழிவறையுள் சென்று பார்த்தபோது மரியாள் குழந்தையை அங்கிருந்த பிளசிற்குள் போட்டு கொல்ல முயற்சி செய்து கொண்டிருந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த டோரிஸ்  உடனடியாக ஊழியர்களை அழைத்துள்ளார்.

விரைந்து வந்த ஊழியர்கள் குழந்தை மற்றும் மரியாதை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சிகிச்சை முடிந்த பின்னர் இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, காவல்துறையினர் தற்போது விசாரணையை தொடங்கியுள்ளனர்.

விசாரணையின் இறுதியில் தான் மரியா எதற்காக குழந்தையை கொலை செய்ய முயன்றார் என்பது தெரியவரும் என்று காவல்துறையினர் கூறுகின்றனர். இந்த சம்பவமானது ஹோண்டுராஸ் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.