திருமணமாகி ஒரே வருடம்! பிரிந்து சென்ற கணவன்! கர்ப்பமான மனைவிக்கு பிரசவ நாளில் ஏற்பட்ட பகீர்..! சென்னை அதிர்ச்சி!

குழந்தை பிறந்த சில மணி நேரத்திலேயே தாய் குழந்தையுடன் சேர்ந்து உயிரிழந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை திருவொற்றியூரில் ஜோதி நகர் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு கணேசலிங்கம் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் கணினி பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ஓராண்டுக்கு முன்பாக பிரபா என்ற 24 வயது பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

திருமணமான 4 மாதங்களிலேயே கணவன் மனைவியிடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்து வாழ தொடங்கினர். வரதட்சனை மற்றும் விவாகரத்து ரீதியில் நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பிரபா கர்ப்பமானார். பிரபா கர்ப்பமானதால் பிரிந்த கணவனுடன் சேர்ந்து விடுவார் என்று உறவினர்கள் எண்ணி கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று பிரபாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக உறவினர்கள் அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பிரபாவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் பிரசவம் பார்த்து வந்தனர். குழந்தையானது இறந்து பிறந்துள்ளது. அடுத்த சில மணி நேரத்திலேயே பிரபாவின் உடல் நிலையும் மிகவும் மோசமானது. உடல்நிலை மோசமானதால் அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால் சிகிச்சை பலனின்றி பிரபா உயிரிழந்தார். குழந்தை இறந்து பிறந்தது மற்றும் சில மணி நேரங்களிலேயே பிரபா உயிரிழந்தது ஆகிய நிகழ்வுகள் உறவினர்களின் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனடியாக அவர்கள் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அஜாக்கிரதையாக செயல்பட்ட காரணத்தினாலேயே குழந்தை மற்றும் தாய் உயிரிழந்ததாக கூறி போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தை அறிந்துகொண்ட காவல்துறையினர் மருத்துவமனை வாயிலுக்கு விரைந்து வந்தனர். பிரபாவின் மரணம் குறித்து நிச்சயமாக நீதி விசாரணை எடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தை பிரபாவின் உறவினர்களுக்கு அளித்தனர். அதன் பின்னரே பிரபாவின் உடலைப் பெற்று உறவினர்கள் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டு சென்றனர்.

இந்த சம்பவமானது திருவொற்றியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.