ஒரே ஒரு ஜெல்லி மிட்டாய்! பரிதாபமாக பலியான 4வயது குழந்தை! பெற்றோரே உஷார்!

ஜெல்லி மிட்டாய் சாப்பிட்டு சிறுவன் இறந்த சம்பவமானது பெரம்பலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலம்பாடி என்னும் இடம் அமைந்துள்ளது. இங்கு தர்மராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சில ஆண்டுகள் முன்னர் அதே பகுதியை சேர்ந்த சசிதேவி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு ரங்கநாதன் என்ற 4 வயது மகனுள்ளார்.

நேற்று மதியம் ரங்கநாதன் தனக்கு சாப்பிட ஏதாவது கொடுக்குமாறு அடம் பிடித்துள்ளான். இதனால் எரிச்சலடைந்த சசிதேவி வீட்டருகே இருந்த மிட்டாய் கடையில் ஜெல்லி டப்பாவை வாங்கி ரங்கநாதனிடம் கொடுத்துள்ளார். அழுது கொண்டே இருந்த ரங்கநாதனுக்கு ஜெல்லியை சாப்பிட தெரியவில்லை. டப்பாவை அப்படியே ரங்கநாதன் முழுங்கியுள்ளான்.

சின்ன குழந்தையின் தொண்டை குழியில் ஜெல்லி முழுவதுமாக சிக்கிக்கொண்டது. உடனே ரங்கநாதனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தான். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சசிதேவி ரங்கநாதனை அருகில் இருந்த அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தார்.

அங்கு ரங்கநாதனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். சாப்பிட்டு ஜெல்லி மூச்சுக்குழாயில் சிக்கிக்கொண்டதால் மூச்சுத்திணறி இறந்து விட்டதாக கூறினர்.

காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிறுவன் ரங்கநாதனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.