13 வயது தான்..! மர்மமான முறையில் உயிரிழந்த பிரபல நடிகை! சடலத்தை உறவினர்கள் செய்த செயலால் அதிர்ச்சி!

அமெரிக்காவில் குழந்தை நட்சத்திரம் ஒருவர் இறந்திருப்பது ஹாலிவுட் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஹாலிவுட் திரைப்படங்களிலும், அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், அமெரிக்கா நாடகங்களிலும் நடித்து புகழ் பெற்றவர் லாரல் கிரிக்ஸ்‌. இவருடைய நடிப்பாற்றலை பார்த்து பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் வியந்துள்ளனர். 

அமெரிக்காவில் புகழ்பெற்ற நாடக அரங்கான, பிராட்வே அரங்கில் பல நாடகங்களில் நடித்துள்ளார். தன்னுடைய 6 வயது முதல் லாரல் நடித்து வருகிறார்.

6-ஆம் தேதியன்று லாரலுக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பதறிய குடும்பத்தினர் உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனளிக்காமல் லாரல் உயிரிழந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

இந்த செய்தியை அவர்களின் குடும்பத்தினர் இன்று வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர். செய்து எழுந்தவுடன் ஹாலிவுட் திரையுலகம் சோகத்தில் மூழ்கியது. பல முன்னணி நட்சத்திரங்கள் தங்களுடைய அஞ்சலியை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர். லாரல் இறந்ததற்கான காரணங்கள் இன்னும் தெரியவரவில்லை. 

இந்த சம்பவமானது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.