எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து பயணித்த புத்தம் புதிய கார் வெடித்துச் சிதறியது! அதிர்ச்சியில் அதிகாரிகள்!

தமிழ்நாட்டின் முதல்வர் பழனிசாமி அவர்கள் அறிமுகம் செய்து வைத்த கார் மாடல் கனடா நாட்டில் வெடித்து விபத்துக்குள்ளாகி இருக்கும் சம்பவமானது அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.


முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சென்ற வாரத்தில் ஹுண்டாய் கார் நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்து வைத்தார். இந்த காரின் பெயர் கோனார் எலக்ட்ரிக் எஸ்யூவி. மிகவும் குறைந்த அளவில் மின்சாரத்தை பிரயோகித்து நெடுந்தூரம் வரை பயணிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதே எலக்ட்ரிக் காரானது கனடா நாட்டிலும் விற்பனைக்கு வந்துள்ளது. கனடா நாட்டில் பிரதான சாலையில் ஓரமாக நின்று கொண்டிருந்த கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. சாலையில் சென்ற பொதுமக்கள் பேரதிர்ச்சி அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக தீப்பற்றி எரிந்த போது காரினுள் எவருமில்லை.

தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். கார் எதனால் தீப்பிடித்து எரிந்தது என்பதை இதுவரை யாராலும் கண்டுபிடிக்க இயலவில்லை. அதிக நேரம் சார்ஜ் செய்யப்பட்டதால் வெப்பம் தாங்காமல் கார் தீப்பிடித்து எரிந்து இருக்கலாம் என்று அறிவியலாளர்கள் வியூகிக்கின்றனர். 

கனடாவில் விற்கப்படும் காரில் லித்தியம் அயான் பேட்டரி உபயோகிக்கப்படுகிறது. இதன் ஹார்ஸ் பவர் 64 கிலோவாட் என்பதாகும். இந்தியாவில் விற்கப்படும் இந்த காரின் விலை சுமார் 23.5 லட்சமாகும். இந்த காருக்கு 8 வருட வாரண்டியூம் அளிக்கின்றனர். கார் எரிந்து போன சம்பவமானது புதிதாக காரை வாங்குவதற்கு முன் பதிவு செய்திருந்தோரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.