இஸ்லாமியர்களுக்கு முதல்வர் காட்டிய செம மரியாதை...! ஆனந்தத்தில் சிறுபான்மையினர்

எப்போதுமே சிறுபான்மையினர் மனம் கோணாமல் நடக்கும் ஆட்சி என்றால் அது அ.தி.மு.க.தான். இதனை மீண்டும் நிரூப்பிக்கும் வகையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்த காரியம் இஸ்லாம் சகோதரர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளது.


தேர்தல் பிரசாரத்துக்காக காஞ்சிபுரம் மாவட்டம் சென்றுள்ளார் எடப்பாடி பழனிசாமி. அப்போது காஞ்சிபுரத்திலுள்ள அண்ணா நினைவகத்துக்குச் சென்று அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் அண்ணா அவர்களின் வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்புகளை பார்வையிட்டார்.

இதையடுத்து காஞ்சிபுரத்தில் பிரசார வாகனத்தில் உரை நிகழ்த்திக்கொண்டு இருந்தார். அப்போது சரியாக 1 மணிக்கு, இஸ்லாமிய மக்கள் தர்காவில் தொழுகை மேற்கொள்வதை அறிந்தார். உடனடியாக தன்னுடைய தேர்தல் பிரசாரத்தை நிறுத்தினார் முதல்வர்.

இஸ்லாமிய பெருமக்கள் தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டது உறுதியாக தெரிந்தபின்னரே, தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்த தகவல் இஸ்லாமிய மக்களிடம் பரவவே, அத்தனை பேரும் ஆச்சர்யத்தில் முதல்வரை வாழ்த்தினார்கள். முதல்வர் செயலுக்கு சிறுபான்மை மக்களிடம் பாராட்டும் மகிழ்ச்சியும் கிடைத்துள்ளது.