தந்தை திடீர் மரணம்..! நாளை இறுதிச்சடங்கு..! பங்கேற்கப்போவதில்லை என அறிவித்த யோகி! நெகிழ வைத்த காரணம்!

உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை காலமான செய்தியானது உத்திரப்பிரதேசத்தில் வைரலாகி வருகிறது.


உத்திரபிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத். இவர் பாரதிய ஜனதா கட்சியின் முன்னணி தலைவர்களுள் ஒருவராவார். சென்றமுறை நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக உத்திரப்பிரதேசத்தில் பெற்ற வெற்றிக்கு காரணமாக இருந்தவரும் இவரே. அதனால்தான் இவருக்கு முதலமைச்சர் பதவியை வழங்கினர்.

முதலமைச்சர் பதவியேற்ற பிறகு பல்வேறு நலத்திட்டங்களை உத்திரபிரதேசம் மக்களுக்கு செய்துவந்தார். அவ்வப்போது சில சர்ச்சையான  கருத்துக்களை பேசி அவப்பெயரை பெற்று வந்தார். இவருடைய தந்தையின் பெயர் ஆனந்த் சிங் பிஷ்த். தற்போது யோகி ஆதித்யநாத் உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று அதிகாலை யோகி ஆதித்யநாத் அவர்களின் தந்தை இயற்கை எய்தியுள்ளார். அதாவது அவர் சென்ற மாதம் 15-ஆம் தேதி முதல் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்த அவருடைய உடல்நிலை மோசமானதால் அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது. பின்னர் டயாலிசிஸ் சிகிச்சையும் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே உயிருக்கு மிகவும் போராடி வந்துள்ளார். இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய இறுதி சடங்குகள் உத்திரப்பிரதேச மாநிலத்தில் நாளை நடைபெறும் என்று குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

ஆனால் தந்தையின் இறுதிச்சடங்கில் யோகி ஆதித்யநாத் கலந்துகொள்ளப் போவதில்லை என்று செய்தி வெளியாகியுள்ளது. மாநிலம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் யோகி ஆதித்யநாத் தீவிரம் காட்டி வருவதால், தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள போவதில்லை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்பை யோகி ஆதித்யநாத்தின் கடமை உணர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக கருதி பாரதிய ஜனதா கட்சியினர் அவரை பாராட்டி வருகின்றனர். இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.