மீண்டும் கொரோனா லாக் டவுன் அறிவிக்கப்பட வேண்டுமா..? முதல்வர் எடப்பாடியார் சீரியஸ் ஆலோசனை.

கொரோனா ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது என்று நினைத்து சந்தோசம் அடைவதற்குள், இங்கிலாந்தில் புதுவகை கொரோனா ஆட்டத்தை ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டது.


இதையடுத்து சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.. உருமாறிய கொரோனா தமிழகத்தில் பரவாமல் இருக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

 தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும் அடுத்த மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய ஊரடங்கு தளர்வுகள் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு மாதமும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. தற்போது பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. விமான போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனா இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்து வந்தவர்களில் சிலருக்கு பரவியிருப்பதால் அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது? குறித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர்.

ஜனவரி 1ம் தேதி முதல் புதிய தளர்வுகள் அறிவிக்கபப்ட வேண்டியது உள்ளதால், இதுகுறித்து சீரியஸ் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையடுத்து மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி முடிவுகளை அறிவிப்பார் எடப்பாடி பழனிசாமி.