சென்னையில், மக்கள் பயன்பாட்டுக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரண்டு மேம்பாலங்களைத் திறந்துவைத்தார்.
முதல்வர் எடப்பாடி சென்னைக்கு இரண்டு பாலங்கள் திறந்துவைத்தார்! நான்கு மாவட்டங்களில் கொரோனா ஆய்வுக்குத் தயார்.

சென்னை பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் ரூ.82.66 கோடி மதிப்பீட்டில் 1.53 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
பல்லாவரம் பேருந்து நிலையம் முன் தொடங்கும் புதிய பாலம், விமான நிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலையில் நிறைவடையும். தாம்பரத்தில் இருந்து கிண்டி நோக்கி வருபவர்கள் பயன்படுத்தும் வகையில் ஒருவழிப்பாதையாக புதிய பாலம் பயன்பாட்டிற்கு வந்தது.செ
அதேபோன்று, செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்கா சந்திப்பு அருகே தேசிய நெடுஞ்சாலையில் ரூ.55 கோடியில் 711 மீ நீளம், 22 மீ அகலம் கொண்ட 9 வழி சாலை மேம்பாலத்தை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.
பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , ’ கோயம்பேடு மேம்பால பணிகள் முடிக்கப்பட்டு டிசம்பரில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும். பணிகளை முடித்து பெருங்களத்தூர் மேம்பாலத்தை 2021 அக்டோபரில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது’ என்றும் கூறினார். மீண்டும் நான்கு மாவட்டங்களில் கொரோனா ஆய்வு பணி மேற்கொள்வதற்கு எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.