முதல்வர் எடப்பாடி சேலத்தில் சுற்றுச்சுவர் விழுந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் நிதியுதவி!

சேலம் மாவட்டத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் நிவாரணமாக வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.


சேலம் மாவட்டம் வீரக்கல்புதூர் அருகே இரட்டை இருப்புப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, ஒப்பந்தத்தின்படி,ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அப்போது, 10 உயரம் கொண்ட பழைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில், அங்கு பணியாற்றி வந்த ஊழியர்கள் சிக்கினர். இதில், கவிதா என்பவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இந்த நிலையில், சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த கவிதா என்பவர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும், லேசான ரூ.25 ஆயிரம் வழங்கவும் ஆணையிட்டுள்ளார்.