நீலகிரி மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி ஆய்வு…! மாற்றுத் திறனாளிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நலத்திட்ட உதவிகள்.

கொரோனா காலத்திலும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்துவருகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் ஆய்வுகளை மேற்கொண்டார்.


இதையடுத்து, நீலகிரி மாவட்டத்தில் ரூ.520 கோடியில் 123 புதிய பணிகளுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். தமிழகம் அரசினர் விருந்தினர் மாளிகையில் இண்கோசர்வ் சார்பில் வாகன சேவையை முதல்வர் தொடங்கி வைத்து தொடர்ந்து முன்னாள் படைவீரர் நலத்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை, கூட்டுறவுத்துறை, நகராட்சிகள், வனத்துறை, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், ஊரக வளர்ச்சித்துறை, பேரூராட்சிகள், தாட்கோ, இண்ட்கோசர்வ், தோட்டக்கலைத்துறை, கதர் வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தொழில்நுட்ப கல்வித்துறை ஆகிய துறைகளின் சார்பில் ரூ.189.33 கோடியில் முடிவுற்ற 67 திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.

 மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, பேரூராட்சிகள், நகராட்சிகள், பொதுப்பணித்துறை, தாட்கோ, இண்கோசர்வ், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம், வனத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, பொதுப்பணித்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை ஆகிய துறைகளின் சார்பில் ரூ. 131.57, கோடியில் 123 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள், பயனாளிகளுக்கு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பெருங்கடன், இயற்கை வேளாண்மை செய்ய ஊக்கத்தொகை வழங்குதல், முதலமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.