காவலர்கள் உயிர் தியாகத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அஞ்சலி..!

வீரவணக்க நாளை முன்னிட்டு, அனைத்து காவல் நண்பர்களின் உயிர் தியாகத்தைப் போற்றி வணங்குவதாக தமிழக முடல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி காவலர்கள் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இன்று, சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் டிஜிபி திரிபாதியும், காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலும் காவலர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில், காவலர்களின் வீர வணக்க நாளை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்விட் போட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார். அவர் போட்டிருக்கும் ட்வீட்டில், ’’சமூகத்தின் பாதுகாவலனாய், பொதுமக்களின் உற்ற தோழனாய், அர்ப்பணிப்பின் இலக்கணமாய், தங்களின் அயராத உழைப்பால் அல்லும் பகலும் மக்கள் பணியாற்றிடும் அனைத்து காவல் நண்பர்களின் உன்னத தியாகத்தை தேசிய காவல்துறை தின நாளில் நினைவு கூர்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.