புறநகர் சேவையை தொடங்கவேண்டும்.! ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்!

கொரோனா தொற்று பரவல் தொடங்கியதும் நாடு முழுவதும் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இப்போது மாநிலங்களுக்கும், மாநிலங்களுக்கு இடையிலும் சிறப்பு ரயில் சேவையும், மெட்ரோ ரயில் சேவையும் மட்டுமே தொடங்கப்பட்டுளது.


இப்போது புறநகர் சேவையை தொடங்கவேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருக்கிறார்.

இதுகுறித்து ஏற்கனவே கடந்த 2ம் தேதி கடிதம் எழுதியிருப்பதையும் முதல்வர் சுட்டிக்காட்டியிருக்கிரார். புற நகர் சேவையை தொடங்குவதன்மூலம் பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும் என்பதுடன் பொருளாதார மீட்புக்கும் அவசியம் தேவை என்று கூறியிருக்கிறார்.

இதையடுத்து வரும் நவம்பர் 1 முதல் புறநகர் ரயில் சேவை தொடங்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.