அல்லாள இளைய நாயக்கருக்கு சிலை ரெடி... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

ஏற்கனவே மக்களுக்கு நலன் கிடைக்கும் வகையில் ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தமிழக தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பல்வேறு தலைவர்களுக்கும் சிலை வைப்பது, மணிமண்டபம் அமைப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் அல்லாள இளைய நாயக்கருக்கும் சிலை வைக்கப்படும் என்று முதல்வர் அறிவிப்பு செய்துள்ளார்.


நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தொகுதிக்குட்பட்ட கபிலர்மலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். திறந்த வெளி வேனில் நின்று வாக்குசேகரித்தார். அப்போது அவர், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் முதன்மை மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. தமிழகத்தில் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த சிறந்த தலைவர்களுக்கு சிலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அல்லாள இளைய நாயக்கருக்கும் விரைவில் சிலை அமைக்கப்படும்.

 தமிழகத்தில் வீடுகள் இல்லாத ஏழை மக்களுக்கு கானிகிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். எத்தனை வீடுகள் வேண்டுமானாலும் கட்டி தர பிரதமரும் உறுதியளித்துள்ளார். தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மக்கள் மனம் குளிரும் வகையில் இன்னும் பல அறிவிப்புகள் வெளியிடப்படும். விவசாயிகளின் வாழ்க்கை தரம் உயர துணை நிற்கும் அம்மாவின் அரசு மீண்டும் மலர இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும், எனக் கூறினார்.

மேலும், மக்களின் குறைகளைத் தீர்க்க வேண்டும் என்றால் ஓடோடி வருவேன் என்றும் உறுதி அளித்திருக்கிறார்.